வடக்கு பார்த்த தட்சிணாமூர்த்தி
ADDED :1369 days ago
தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள தனி கோயிலில், வடக்கு பார்த்த நிலையில் இருக்கிறார். தட்சிணாமூர்ததிக்கு அருகில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் நான்கு முனிவர் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு 18 முனிவர்கள் உள்ளனர். குருதோஷ பரிகாரமாக இவரது சன்னதியில் நெய் தீபம் ஏற்றுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இனிப்புகள் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தொடர்புக்கு 044 – 2573 3703