மலை வலம் வரும் பெருமாள்!
ADDED :1363 days ago
வேலூர் மாவட்டம், ஆம்பூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது துத்திப்பட்டு வரதாஜ பெருமாள் கோயில். தைமாதம் காணும் பொங்கலன்று, இத்தலத்திற்கு அருகிலுள்ள நிமிஷாசல மலையைச் சுற்றி உற்சவமூர்த்தி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மலையில் ரோமரிஷி இன்றும் தவம் இருப்பதாகவும், அவருக்குக் காட்சி கொடுக்கவே பெருமாள் மலையை வலம் வருவதாகவும் ஐதிகம்.