எம பயம் போக்கும் சனீஸ்வரர்
ADDED :1363 days ago
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் கோலியனூரில் உள்ளது வாலீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் மூலவர். ஈசன், சுயம்பு மூர்த்தமாக மேற்கு நோக்கி அருள்புரிகிறார். அம்பாள் பெரியநாயகி, இக்கோயில் ஈசான்ய மூலையில் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் சனி பகவான். தெற்கு எமனின் திசை. இவரை வணங்குவதால் எமபயம் நீங்கும். தவிர, இச்சன்னிதியை 11 சனிக்கிழமைகளில் 11 சுற்றுகள் சுற்றிவர, சனியின் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் ஏற்படும். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் காட்சி தருவது அபூர்வம்.