மதுக்கரையில் மண்டல மஹோற்சவ படிபூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :13 hours ago
கோவை: மதுக்கரையில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா ஆலயத்தில் நடந்த படிபூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுக்கரை ஏ.சி.சி. காலனியில் உள்ள, ஸ்ரீ லட்சுமி நாராயணா ஆலயத்தில், கடந்த 17ம் தேதி துவங்கிய மண்டல மஹோற்சவம், ஜன. 14ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை முதல் அலங்கார பூஜை, தீபாராதனை, நட்சத்திர பூஜை, பஜனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அய்யப்ப சுவாமிக்கான படிபூஜை நடந்தது. சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் பஜனை நடத்தினர். மதுக்கரை, மரப்பாலம், மதுக்கரை மார்க்கெட் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.