உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் சபரிமலை தரிசனம்: டிச.27ல் மண்டல பூஜை

மதுரையில் சபரிமலை தரிசனம்: டிச.27ல் மண்டல பூஜை

மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஸ்ரீ ஆப்தன் சபா, சுவாசநேசி யோகா மையம், ஸ்ரீ சாய் விருக் ஷா டிரஸ்ட் சார்பில் சுவாமி ஐயப்பனுக்கு 12ம் ஆண்டு மண்டல பூஜை டிச.27 ல் நடக்கிறது. அன்று மதியம் 3:00 மணிக்கு பூங்கா முருகன் கோயிலில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரை குழந்தைகள் இருமுடி சுமந்து வர, பெண் பக்தர்கள் கலசங்கள் எடுத்து வர பூப்பல்லக்கில் சுவாமி ஐயப்பனின் வீதி உலா நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு ஹரிஹரன் சுவாமி தலைமையில் அபிஷேகம், ஆராதனை, இசையுடன் மண்டல பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு அனுமதி இலவசம். 


நிர்வாகிகள் கூறுகையில், மண்டல பூஜையில் பங்கேற்பவர்களுக்கு பூஜிக்கப்பட்ட ஐயப்பன் படம், லட்டு, ஆன்மிக புத்தகம், 2026 காலண்டர், மங்கள பொருட்கள், ருத்ராட்சம் உள்ளிட்டவற்றுடன் பிரசாதம் வழங்கப்படும். நேரில் வரமுடியாதவர்கள் ஆப்தன் டிவி யுடியூப் சேனல் நேரலையில் காணலாம் என்றார். தொடர்புக்கு 86102 28600.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !