உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் பகுதிகளில் யுகாதி தின கொண்டாட்டம்

ராஜபாளையம் பகுதிகளில் யுகாதி தின கொண்டாட்டம்

ராஜபாளையம்: தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி திருவிழா ராஜபாளையம் சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் பழைய பாளையம் பெரிய சாவடி முன்பு நேற்று முன்தினம் மாலை ஆய்க்குடி குமார் பாகவதர் குழுவினர் சார்பில் நாமசங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை இளைஞர் சங்க உறுப்பினர்கள் சார்பில் சமூக பெரியோர் சிலைகளுக்கு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ராமசுவாமி கோயிலில் சிறப்பு ஹோமம், அன்னதானம் நடந்தது. மாலை என் .ஆர் .கே மண்டபத்தில் ராமநாதசுவாமி அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நிகழ்ச்சி இணையே பெரிய சாவடி முன்பு வான வேடிக்கைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பழைய பாளையம் சாவடி தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

* சிங்கராஜா கோட்டை சார்பில் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப் பட்டன. சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி தலைவர் பவித்ரா, நகர்மன்ற உறுப்பினர் ஷியாம் பங்கேற்றனர். சிங்கராஜா கோட்டை மகாசபை தலைவர் ராம் சிங் ராஜா தலைமை வகித்தார். வெங்கட்ராம் ஸ்பின்னிங் மில் அதிபர் ஸ்ரீனிவாச ராஜா முன்னிலை வகித்தார். இளைஞர் அணி தலைவர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

*திருவனந்தபுரம் கோட்டை, சக்கராஜா கோட்டை பகுதிகளிலும் இளைஞர் சங்கத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டாடினர்.

*பொன்னகரம், பாரதி நகர் கவுரா நாயுடு நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது. மாநில பொருளாளர் செல்வராஜ், ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், தென் மண்டல செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !