சண்முகநாதர் கோயிலில் பங்குனி கிருத்திகை வழிபாடு
ADDED :1327 days ago
கம்பம்: காமயகவுண்டன்பட்டி மலையடிவாரத்தில் உள்ள சண்முகநாதர் கோயிலில் பங்குனி கிருத்திகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைக்கு அருகில் உள்ளது சண்முகநாதர் கோயில். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் புராதனமானது. கடந்தாண்டு இங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று பங்குனி கிருத்திகை நாளாகும். ஆடி, தை மற்றும் பங்குனி கிருத்திகைகளில் விசேசமானது பங்குனி கிருத்திகை. இன்று காலை பால், தயிர், நெய், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து முருகனை தரிசித்தனர்.