முத்தாலம்மன் கோயில் திருவிழா
ADDED :1325 days ago
கொட்டாம்பட்டி: சொக்கம்பட்டி மந்தை முத்தாளம்மன் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 ல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று மந்தையில் இருந்து கிராமத்தார்கள் பல்லக்கை கொண்டு சென்று காஞ்சரம் மரத்து விநாயகர் கோயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முத்தாளம்மனை அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயிலுக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் விநாயகர்கோயிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தும், மாவிளக்கு ஏற்றியும், அங்கப்பிரதட்சனம் செய்து கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். இன்று மாலை (ஏப்.6) கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூஞ்சோலைக்கு கொட்டாம்பட்டி, சொக்கம்பட்டி கிராமத்தார்கள் அம்மனை கொண்டு செல்கின்றனர்.