கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சாகை வார்த்தல் விழா
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா சாகை வார்த்தலுடன் நேற்று விழா துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நேற்று சாகை வார்த்தலுடன் துவங்கியது. இதனையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, நத்தம். தொட்டி. அண்ணாநகர், சிவலியாங்குளம்,பாரதிநகர் உள்ளிட்ட 7 கிராமங்கள் மட்டுமல்லாமல் கீழ்குப்பம்வேலூர், அயன்வேலூர், கொரட்டூர், குச்சிப்பாளையம், பெரும்பாக்கம் கிராமங்களில் இருந்தும் பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து ஸ்ரீ மாரியம்மனுக்கு படையலிட்டனர். அப்போது சுவாமிக்கு தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த சாகை வார்த்தல் திருவிழாவில் மணிகண்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வழிபட்டார். திருநாவலூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றும் (6ம் தேதி) மாலை 4 மணி அளவில் பந்தலடியில் முக்கிய பிரமுகர்களுக்கு தாலி கட்டுதல் ( பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சாந்தனு சரிதம் மற்றும் தினசரி விழாக்கள் நடக்கிறது.