கூடலூர் காளியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை
ADDED :1324 days ago
கூடலூர்: கூடலூர் காளியம்மன் கோயில் விழாவில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கூடலூர் பாரதியார் தெரு சார்பில் காளியம்மன் கோவில் விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதிகாலை மாவிளக்கு எடுத்தனர். மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கோலப் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.