உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடியில் பால்குடம், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக் கடன்

காரைக்குடியில் பால்குடம், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக் கடன்

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள வைரவபுரம் நல்ல முத்து மாரியம்மன் கோயில் பங்குனி மாடு மாதிரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி வைரவபுரத்திப் உள்ள நல்ல முத்துமாரியம்மன் கோயிலின் 38 ஆம் ஆண்டு பங்குனி சித்திரை திருவிழா கடந்த மார்ச் 28 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தினமும் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கியத் திருவிழாவான நேற்று ஏராளமான பக்தர்கள், பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !