உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடியும் தருவாயில் ராமேஸ்வரம் கோயில் விடுதிகள்

இடியும் தருவாயில் ராமேஸ்வரம் கோயில் விடுதிகள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் இடியும் தருவாயில் உள்ள தங்கும் விடுதியால், பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதி சுற்றி லோ பட்ஜெட்டில் ஹிந்து அறநிலைதுறையின் தங்கும் விடுதிகள் இருந்தது. இதில் தெற்கு, வடக்கு ரதவீதியில் தங்கும் விடுதிகள் சேதமடைந்து இடியும் தருவாயில் இருந்தது. 2021ல் தெற்கு ரதவீதியில் சேதமடைந்த கிடந்த ஒரு விடுதியை ரூ.1.50 லட்சம் செலவில் கோயில் நிர்வாகம் புதுப்பித்தது. ஆனால் இந்த விடுதியில் ஒரு நாள் கூட பக்தர்கள் தங்க அனுமதிக்காத நிலையில், எதற்காக இதனை புதுப்பித்து கோயில் நிதியை வீணாக்கினார்கள் என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் விடுதியை சுற்றி முள் மரங்கள், வேம்பு மரங்கள் வளர்ந்து உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !