உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா

கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த தொரவலூர் ஊராட்சியில் புகழ் பெற்ற கோட்டை முனியப்பன் கோவில் உள்ளது. கோவில் பொங்கல் விழா ஆன்டு தோறும் ஏப்ரல் மாதம் நடைப்பெறும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட வில்லை. இந்த ஆண்டு பொங்கல் விழா கோரோனா வைரஸ் கட்டுபடுத்தப்பட்டதையொட்டி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, பல்வேறு ஊர்களில் இருந்து, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் முனியப்பனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் வேண்டுதலாக கொண்டு வந்த 500 க்கு மேற்பட்ட கிடா வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கிடா கோவில் வளாகத்தில் சமையல் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !