சக்திமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம்
ADDED :1315 days ago
மேலூர்: மேலுார் சக்திமாரியம்மன் கோயில் பங்குனிமாத திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் சித்தி விநாயகர் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விளக்கு பூஜை நடைபெற்றது. இன்று( ஏப். 9) பக்தர்கள் தெருப்பொங்கல் வைத்தும், பூத்தட்டு, முளைப்பாரி மற்றும் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் அம்மன் புஷ்பரத ஊர்வலம் நடைபெறுகிறது. ஏப்.10 ல் முளைப்பாரி கரைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.