உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சேரிபுத்தூர் பெருமாள் கோவிலில் நாளை ராம நவமி விழா

செஞ்சேரிபுத்தூர் பெருமாள் கோவிலில் நாளை ராம நவமி விழா

சூலூர்: செஞ்சேரிபுத்தூர் காரண வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை ராம நவமி விழா நடக்கிறது. சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரி புத்தூர் ஸ்ரீ பூமி நீளா சமேத காரண வரதராஜ பெருமாள் கோவில் பழமையானது. இக்கோவிலில் நாளை ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. விழாவை ஒட்டி உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் சேவையும், வெள்ளலூர் கீதா பஜன் மற்றும் செஞ்சேரிபுத்தூர் ராம நாம பஜனை குழுவினரும் இணைந்து பிருந்தாவன நடன நிகழ்ச்சியை நடத்துகின்றனர். தொடர்ந்து, பிரசாதம் , அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இதேபோல், சூலூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் ராம நவமியை ஒட்டி நாளை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !