உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படைத்தலைவி நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

படைத்தலைவி நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி படைத்தலைவி நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஏப். 4 ம் தேதி யாகபூஜைகள் தொடங்கி கணபதி ஹோமம், தனபூஜை, வாஸ்து சாந்தி என நான்கு கால பூஜையாக நடந்தது. நேற்று காலை 9:25 மணிக்கு புனித நீர் கலசம் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும் படைத்தலைவி அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டு அன்னதானம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !