கல்கத்தா காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா
ADDED :1614 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகர்., இந்திரா நகர். கல்கத்தா காளியம்மன் கோயிலில் 70ம் ஆண்டு பங்குனி திருவிழா ஏப். 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி ஊர்வலம், பூச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். உச்ச நிகழ்ச்சியாக நேற்று அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமாகி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.