உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிற கோயில்களுக்கு திருநீறு பழநியில் திட்டம் துவக்கி வைப்பு

பிற கோயில்களுக்கு திருநீறு பழநியில் திட்டம் துவக்கி வைப்பு

 பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் திருநீறு பிரசாதத்தை பிற கோயிலுக்கு அனுப்பும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

பழநி கோயிலுக்கு தேவையான திருநீறை சில ஆண்டுகளாக இயற்கை முறையில் கோயில் நிர்வாகமே தயாரிக்கிறது. ஹிந்து அறநிலையத்துறை சார்பில் தரம் உயர்த்தி தயாரிக்கும் திருநீறு, குங்குமத்தை திருவானைக்காவல், திருச்செந்துார், மதுரை, பழநி உள்ளிட்ட 8 கோயில்களில் இருந்து பிற கோயில்களுக்கு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர். பழநியில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், கோவையில் உள்ள ஹிந்து அறநிலைத்துறை கோயில்களுக்கு திருநீறு அனுப்பப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !