சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :1378 days ago
வேப்பூர்: வேப்பூர் அருகே சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், தேர் திருவிழா
நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 1ம் தேதி காப்பு கட்டி, கொ டியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்கியது. தினம் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் ஸ்ரீ தே வி பூதேவி
சமேத சஞ்சீவிராய பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் உற்சவர் சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்கரிக்கப்பட்ட சஞ்சீவிராய பெருமாள்
சுவாமி, ஸ்ரீ தேவி பூதேவி திருக்கல்யாண வைபவம் நடந்தது.