உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பன் கோயில் விழா: நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு

கருப்பன் கோயில் விழா: நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தானிப்பட்டி கிராமத்தில் நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா நடந்தது.

தானிப்பட்டியில் உள்ள சின்னகருப்பன், பெரியகருப்பன் கோயிலில் பங்குனியில் நடைபெறும் விழாவில்ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். பல தலைமுறைகளாக ஒரு பங்காளிகள் பிரிவினர் திருக்கோஷ்டியூர், காட்டாம்பூர், வைரவன்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பங்கேற்கின்றனர். இடி விழுந்தும் கருகாமல் உயிருடன் உள்ள பனைமரத்தடியில் உள்ள சுவாமிகளுக்கு முன் நேற்று முன்தினம் ஆண்கள் மட்டும் கூடினர். சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கிடா வெட்டி, சாமியாடி, படையலிட்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பனை ஓலையை வெட்டி அதை மடித்து அதில் படையலிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !