பேகூர் கோவிலில் இன்று பிரம்ம ரத உற்சவம் ஆரம்பம்
ADDED :1317 days ago
பேகூர், : பெங்களூரு பேகூரின், பிரசன்னாம்பா சமேத நாகேஸ்வரசுவாமி கோவில் பிரம்ம ரத உற்சவம் இன்று ஆரம்பமாகிறது.பெங்களூரு பேகூரில், பிரசன்னாம்பா சமேத நாகேஸ்வரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பிரம்ம ரத உற்வசம் நடப்பது வழக்கம். இந்தாண்டு இன்று முதல், வரும் 25 வரை விழா நடக்கிறது. தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இன்று யாகசாலை நுழைவு நிகழ்ச்சி; நாளை கொடியேற்றம்; 17ல் காசியாத்திரை மற்றும் கிரிஜா கல்யாண உற்சவம்; 19ல் பிரம்ம ரத உற்சவம் நடக்கிறது.ரத உற்சவத்தின் போது வானிலிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக மலர் துாவப்படுகிறது. கோவிலில் உள்ள பஞ்சலிங்க தரிசனமும் நடக்கஉள்ளது.