சித்தர் பீட நந்திக்கு கும்பாபிஷேகம்
ADDED :4841 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த மொடக்கேரி சிவசக்தி சித்தர் பீடத்தில், நந்திக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஆடி அமாவாசையையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதையொட்டி, 12ம் தேதி கொடியேற்றுதல், கங்கணம் கட்டுதல் நடந்தது, 17ம் தேதி மாலை ஸ்வாமி ஊர்வலம், உத்தனூர், பருத்திநத்தம், குளியனூர், சந்தனூர், ஏ.கொல்லஅள்ளிபுதூர் கிராம மக்கள் பங்கேற்ற தட்டு வரிசை ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் ஆடி அமாவாசையையொட்டி காலை நந்திக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 5 மணிக்கு யாகசாலை பூஜையும், அலங்கார பூஜை, தொடர்ந்து கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், பால்குட ஊர்வலம், பால் அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை மொடக்கேரி, அ.கொல்லஅள்ளி ஊர் மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.