தமிழ்ப்புத்தாண்டு : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் தீர்த்தம் வாரி
ADDED :1474 days ago
ராமேஸ்வரம்: தமிழ்ப் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்தனர்.
நேற்று தமிழ்ப் புத்தாண்டு விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி, தரிசனம் செய்தனர். நேற்று காலை 9:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு கோயில் குருக்கள் தீர்த்தம் வாரி கொடுத்தனர். பின் சுவாமி, அம்மன் கோயில் நான்கு ரதவீதியில் உலா வந்தனர். அப்போது வீதியில் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.