ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஆந்திர துணை முதலமைச்சர் தரிசனம்
ADDED :1631 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில அறநிலை துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான கொட்டு சத்யநாராயணா இன்று சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தாரோடு கோயிலுக்கு வந்தவர்களை கோயில் நிர்வாக அதிகாரி நெத்தி.ராஜு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு. ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ குடும்பத்தினர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் . அமைச்சர் குடும்பத்தினர் கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் சாமி படத்தையும் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கினர்.மேலும் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசீர்வாதம் செய்தனர்.