பரமக்குடியில் வைகையில் இறங்கிய கள்ளழகர்
ADDED :1304 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெ ருமாள் (அழகர்) கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி பெருமாள் கோயிலில் கோடை த்திருநாள் எனும் சித்திரை திருவிழா
ஏப்.,11-ல் துவங்கியது. தொடர்ந்து ஏப்., 15 காலை பெருமாளுக்கு கும்ப திருமஞ்சனம் நடத்தப்பட்டது. நள்ளிரவு 2:00 மணிக்கு பெருமாள் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அழகர் நீலப்பட்டுடுத்தி, பாயாசம் சாப்பிட்டபடி வந்ததால் ஊரில் நல்ல சுபீட்சமான சூழல் நிலவும் என தெரிவிக்கப்பட்டது. வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள் தல்லாகுளம் மண்டகப்படிஅடைந்தார். அங்கு நேற்று 9:15 மணிக்கு அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரம்ஆனார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடிக்க பெருமாள் காட்டு பரமக்குடி, மஞ்சள் பட்டினம், ஆற்றுப்பாலம் வந்தடைந்தார். அங்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய அழகர் தொடர்ந்து, பெ ரிய பஜார், எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று இரவு 12:00 மணிக்கு காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா , கோவிந்தா என கோஷம் முழங்க கோலாகலமாக
கொண் டாடினர். இரவு பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று மண்டுகமகரிஷிக்கு சாபவிமோ சனம் மற்றும் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்க உள்ளது. சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனே ஜிங்டிரஸ்டி நாகநாதன் டிரஸ்டி அன் டிரசரர்பாலமுருகன், டிரஷ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.