பழநியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளித் தேரோட்டம்
ADDED :1305 days ago
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. பழநியில் சித்திரை மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயில் கிரி வீதியில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஊர் கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி தேரோட்டத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்தார். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். இதில் கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.