உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யம்பாளையத்தில் ஆற்றில் இறங்கிய அழகர்

அய்யம்பாளையத்தில் ஆற்றில் இறங்கிய அழகர்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை, அய்யம்பாளையத்தில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மாலப்பட்டியிலிருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பிய அழகர் சொக்குபிள்ளைபட்டி, சிறுநாயக்கன்பட்டி அணைப்பட்டி, மேட்டுப்பட்டி மண்டகப்படிகளில் வரவேற்கப்பட்டார். ஆஞ்சநேயர் கோயிலில் தலைமை அர்ச்சகர் விஜயராகவன் தலைமையில் சிறப்பு பூஜைகள், எதிர்சேவை நடந்தது. காலை 10:30 மணி அளவில் வைகை ஆற்றில் கோவிந்தா கோஷத்துடன் அழகர் இறங்கினார். அணைப்பட்டி மண்டகப்படியில் இரவு தங்கினார். இன்று முழுவதும் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இரண்டு ஆண்டுகளாக விழா நடக்காததால் பக்தர்கள் பரவசத்துடன் அழகரை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !