உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்துார் வைப்பாற்றில் பச்சை பட்டுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்

சாத்துார் வைப்பாற்றில் பச்சை பட்டுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் பச்சை பட்டுடுத்தி அழகர் இறங்கினார்.  2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நேற்று காலை 11:48 மணிக்கு நடந்தது.

வெங்கடாஜலபதி கோயிலில் குதிரை வாகனத்தில் பெருமாள் கள்ளழகராக வீற்றிருந்தார். பெரியகொல்லபட்டி கிராமத்தினர் நான்கு ரத வீதி வழியாக வலம் வரம் செய்து வைப்பாற்றில் எழுந்தருளச் செய்தனர். மருத்துவ குல சங்கத்தின் திருக்கண்ணில் வீற்றிருந்து அருள் பாலித்தார். பக்தர்கள் முடி காணிக்கை, செலுத்தி வழிபட்டனர் . இதன் பின்னர் பெரிய கொல்லபட்டி கிராமத்திற்கு சுவாமி சென்றார். அங்கு மண்டகப்படி அவர்கள் சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சுவாமி கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் இரவு வழிபாட்டில் நடைபெறும் வாண வேடிக்கையை பார்வையிடுகிறார் நேற்றும் இன்றும் பெரியகொல்லபட்டி முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் சுவாமி திங்கள்கிழமை காலையில் மீண்டும் கோயிலை வந்தடைவார். பெரியகொல்லபட்டி கிராம பொதுமக்கள் சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !