உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ஸ்ரீவித்யா ஹயகீரிவர் ஹோமம்

வடபழநி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ஸ்ரீவித்யா ஹயகீரிவர் ஹோமம்

சென்னை: வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் இன்று (17 ம்தேதி) காலை 9.00 மணி முதல் 11.30 வரை ஸ்ரீவித்யா ஹயகீரிவர் ஹோமம் நடைபெற்றது.

வடபழநி  முருகன் கோவில் அருகில் உள்ளது ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூலப்பெருமாள் கோவில். அறுநுாறு வருடங்களுக்கு முந்திய  இந்தப்பெருமாள் கோவிலில் கடந்த சில வருடங்களாக ஸ்ரீ வித்யா ஹயக்ரீவர் ஹோமம் நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ-, மாணவியர் வருகின்ற தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறவும், படிப்பு, ஞானம், மனோதைரியம், ஞாபசக்தி அதிகரிக்கவும், நல்ல பழக்கவழக்கங்கள் வளரவும், மேல்படிப்பு மற்றும் உத்தியோகம் பெறவும் வேண்டி இந்த ஹோமம் நடைபெறும்.

இன்று (17 ம்தேதி) காலை 9.00 மணி முதல் 11.30 வரை ஸ்ரீவித்யா ஹயகீரிவர் ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஹயக்ரீவர் படத்துடன் கூடிய கையில் கட்டக்கூடிய கயிறும் பேனாவும் இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !