மதுரை சித்திரை திருவிழா: மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்
ADDED :1308 days ago
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழச்சி நடந்தது. இதனை முன்னிட்டு சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தேனூர் கிராமத்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கருட வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், இரவு ராமராயர் மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு திருமஞ்சனத்தை தொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்வு நடக்க உள்ளது.