யாருக்கும் வாழ்வுண்டு.. அதற்கொரு நாளுண்டு!
சாந்தப்படுத்துகிறார் திருவள்ளுவர்
* எதற்கும் ஒரு காலம் உண்டு. அப்போதுதான் உன் முயற்சி நிறைவேறும்.
* யார் மீதும் பொறாமைப்படாமல் இரு. அப்படி இருந்தால் அதுவே உனக்கு கிடைத்த பெரிய சொத்து.
* அடக்கமுடன் வாழ்ந்தால் நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பை பெறலாம்.
* நீ ஒருவருக்கு உதவாதபோதிலும், அவர் உனக்கு ஒரு உதவியை செய்தால் அதற்கு மண்ணுலகம், விண்ணுலகத்தை கொடுத்தாலும் சமமாகாது.
* எல்லா உயிர்களிடம் இரக்கம் காட்டுபவரே உண்மையான அந்தணர்.
* நல்ல பண்புடைய குழந்தைகளை பெற்றால், உனக்கு எந்தப் பிறவியிலும் தீமை உண்டாகாது.
* நிலை இல்லாத பொருட்களை நிலையானவை என்று தவறாக எண்ணாதே.
* துாங்குவது போன்றது மரணம். துாங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
* பிறரை துன்புறுத்தி ஒரு பொருளை பறித்தால், அந்தப்பொருளே உன் மகிழ்ச்சியை பறித்துவிடும்.
* நல்ல வழியில் பெற்ற பொருளை இழந்தாலும், அது பிறகு உனக்கு நன்மையையே தரும்.
* தீய வழியில் வந்த பணம் என்பது, சுடாத மண்பானையில் நீரை சேமிப்பது போன்றது.
* கடவுளை வணங்குவோர் துன்பம் என்னும் கடலை எளிதாக கடந்துவிடுவர்.
* தேர் கடலில் ஓடாது. கப்பல் தரையில் ஓடாது. அதுபோல் உனக்கு என்ன தகுதியோ அதில் மட்டும்தான் சிறப்பாக செயல்படமுடியும்.