/
கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோவிலை பார்த்து வியந்த சிங்கப்பூர் தூதர்: பயபக்தியுடன் தரிசனம்
வடபழனி ஆண்டவர் கோவிலை பார்த்து வியந்த சிங்கப்பூர் தூதர்: பயபக்தியுடன் தரிசனம்
ADDED :1238 days ago
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு வருகை தந்த, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங், கோவிலை கண்டு வியந்துள்ளார்.இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் வீகியூன் மற்றும் கான்சல் ஜெனரல் போங் கோக் டியான் ஆகியோர் சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு வருகை தந்தனர். கோவிலில், பயபக்தியுடன் சாமி கும்பிட்டு திருநீறு பூசிக் கொண்டனர். மேலும் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை கண்டு வியந்தனர். இதுகுறித்து சைமன் வாங் கூறியிருப்பதாவது: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தேன். தமிழகத்தின் செழிப்பான கலாச்சாரத்தை நேரில் கண்டு வியந்தேன். இந்த சிறப்பான அனுபவத்தை தந்ததற்கு நன்றி. அனைவரும் சென்று தரிசிக்க பரிந்துரைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.