ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது
ADDED :1299 days ago
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் 2ம் நாள் தேரோட்டத்தில் தேர் நிலை அடைந்த பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பருத்தி பஞ்சு,நாணயங்கள, பழங்கள் ஆகியவற்றை வாரி இறைத்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் அமர்ந்த கதலி நரசிங்க பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர்களை தேரிலிருந்து இறக்கி பல்லக்கில் அமர வைத்து தேர் வழித்தடம் பார்க்கும் நிகழ்ச்சிக்குப் பின் கோயில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடந்தது.