உலக நன்மைக்காக லட்சுமி நரசிம்மருக்கு பஞ்ச திரவிய அபிஷேகம்
ADDED :1351 days ago
மேட்டுப்பாளையம்: உலக நன்மை வேண்டி, சிறுமுகை அருகே உள்ள அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவிலில், பஞ்ச திரவிய அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சியில், தேன்கல்கரடு மலையடிவாரத்தில், அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு உலக நன்மை வேண்டி அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. சுதர்சன யாகம், புத்திரபாக்கியம் தோஷம் நிவர்த்தி, திருமண தோஷம் நிவர்த்தி, கருடன், ஆஞ்சநேயர் யாகம் தன்வந்திரி யாகம் ஆகிய யாகங்கள் நடந்தன. சுவாமிக்கு பஞ்ச திரவிய அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகி அனந்தாழ்வான், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.