உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி நாடார் பேட்டை பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா நடந்தது.

இக்கோயிலின் பங்குனித் திருவிழா ஏப். 12ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 9 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கோயிலுக்கு வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாலை அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்தல் நடந்தது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அம்மன் வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !