குன்னூர் தந்தி மாரியம்மன் தேரோட்டம்: பரவசத்துடன் பங்கேற்ற பக்தர்கள்
ADDED :1347 days ago
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்த சித்திரை தேரோட்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கி நடந்து வருகிறது. இன்று முக்கிய சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. ஈரோடு கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமி தலைமை வகித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, டி.எஸ்.பி., சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், பக்தர்கள் உப்பு வீசி நேர்த்திகடன் செலுத்தினர். முன்னதாக, வி.பி., தெரு துருவம்மன் கோவிலில் இருந்து தாசப்பளஞ்சிக மகளிர் இளைஞர் குழுவினரின் ஊர்வலம் நடந்தது. இதில் காளி வேடமணிந்த கலைஞர்களின் நடனம் கவர்ந்தது. விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம், இசை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை ஆகியவை நடந்தன.