உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒப்பிலியப்பன் கோவிலில் ராமருக்கு கனகாபிஷேகம்

ஒப்பிலியப்பன் கோவிலில் ராமருக்கு கனகாபிஷேகம்

தஞ்சாவூர்: தென்னக திருப்பதி என போற்றப்படும், 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில்  வேங்கடாசலபதிசுவாமி திருக்கோவிலில், ராமநவமி உற்சவத்தையொட்டி, ராமபிரானுக்கு 1008 பொற்காசுகளை கொண்டு கனகாபிஷேம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில், ஆண்டு தோறும் ராமநவமியையொட்டி, சீதா கல்யாணம், கனகாபிஷேகம், பட்டாபிஷேகம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அது போல இந்தாண்டு கடந்த 10ம் தேதி விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஸ்ரீராமபிரான், ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீலட்சுமணர் ஆகியோருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, 1008 பொற்காசுகள் கொண்டு கனகாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து அனுமனுக்கும் கனகாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து முல்லை, மல்லிகை, வெண்தாமரை, வெள்ளை மற்றும் சிவப்பு அரளி, மரிக்கொளுந்து உள்ளிட்ட பலவகை நறுமணம் மிகுந்த வண்ண மலர்களை கொண்டு சிறப்பு மலராபிஷேகமும், நாதகானத்துடன் ராமர் பட்டாபிஷேகமும் வெகுசிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !