உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம்

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம்

திருநீர்மலை : திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான, ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், தேர்த்திருவிழா நடைபெறும். மலைக்கோவிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்சவம் நடக்கும். இந்தாண்டு சித்திரை திருவிழா, ஏப்., 15ம் தேதி துவங்கியது. 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில், 8ம் நாளான இன்று, திருத்தேரோட்டம் நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்படும் தேர், மாடவீதிகள் வழியாக உலா வந்து, கோவிலில் முடியும்.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களின் வசதிக்காக, குடிநீர், கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !