தங்க ரதத்தில் திருத்தணி முருகர் உலா: வடம் பிடித்த ஜப்பானியர்கள்
ADDED :1235 days ago
திருத்தணி: ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள், தங்க ரதத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகப் பெருமானை, வடம் பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர்.ஜப்பான் நாட்டை சேர்ந்த 10 பேர் கொண்ட முருக பக்தர்கள், தமிழகத்தில் அறுபடை வீடு யாத்திரை மேற்கொண்டு உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்த இவர்கள், முருகப் பெருமான் தங்க ரதத்தில் எழுந்தருள, முன்பதிவு செய்து இருந்தனர்.அதன்படி, இரவு 7:00 மணியளவில், முருகப் பெருமான் தங்க ரதத்தில் எழுந்தருளினார்.ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள், தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். பின், மூலவரையும் தரிசனம் செய்தனர்.