உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமருக்கு பட்டாபிஷேகம்

கோதண்டராமருக்கு பட்டாபிஷேகம்

வாலாஜாபாத்: கம்மவார்பாளையம் கோதண்டராமருக்கு பட்டாபிஷேக வைபவ விழா, வெகு விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில், வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ராமநவமி விழாவை முன்னிட்டு, 10 நாள் திருவிழா நடக்கும். பத்தாவது நாள் திருவிழாவில், சீதா சமேத கோதண்டராமருக்கு, கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, கோதண்டராமருக்கு பட்டாபிஷேக வைபவம் நடந்தது.பின், ஊஞ்சல் உற்சவத்தில், மலர் அலங்காரத்தில் கோதண்டராமர், சீதாதேவி, கோபாலகிருஷ்ணன், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் எழுந்தருளினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, கம்மவார்பாளையம் கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !