அழகிரிநாதர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 10,008 வடை மாலை
ADDED :1376 days ago
சேலம்: ராம நவமியையொட்டி, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ராம நவமி உற்சவ விழா, கடந்த, 10ம் தேதி தொடங்கியது. 15ம் தேதி வரை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. 17, 18, 19ல், பக்தி இன்னிசை, 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, மூலவருக்கு முத்தங்கி சேவை நடந்தது. நேற்று ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், தயிர் உள்பட, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை, பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, 10 ஆயிரத்து, 8 வடைமலை சாத்தப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு, வடைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பின் கலசாபிஷேகம் செய்து, ஆஞ்சநேயர் ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் வெள்ளி கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள், உபய நாச்சியார்கள் சகிதமாக, திரு வீதி உலா எழுந்தருளினார்.