வீரபாண்டி சித்திரை திருவிழா காப்புக்கட்டி விரதம் துவக்கம்
ADDED :1298 days ago
தேனி :தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் காப்புக் கட்டி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்ற விரதத்தை துவக்கினர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 20ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. முக்கிய திருவிழா மே 5 முதல் மே 17 வரை நடக்க உள்ளது. பக்தர்கள் திருவிழா நாட்களில் நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். இதற்காக நேற்று முன்தினம் முதல் அம்மனை தரிசனம் செய்து காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். ஹிந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட கணேசன் தலைமையிலான 10 அர்ச்சகர்கள் சுழற்சி, முறையில் பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு காப்புக்கட்டுகின்றனர்.நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு முல்லையாற்றில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி விரதம் துவக்கினர்.