வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1287 days ago
எரியோடு: எரியோடு அருகே இ.சித்தூர் வீருதம்மாள், வலம்புரி விநாயகர், வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்த்த குட ஊர்வலத்துடன் துவங்கிய விழாவில் 2 கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் அர்ச்சகர் நாகராஜ் நடத்தி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிச்சாமி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் சங்க செயலாளர் நடராஜன், ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.