புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்
 அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று.
சிறப்பான எதிர்காலம் காத்திருக்கு நம்பிக்கை தருகிறார் சாய்பாபா : 
* நேரத்தை வீணாக்காமல் கடமையை செய். சிறப்பான எதிர்காலம் அமையும்.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதை கேட்பது தியானம்.
* சொல்வது எளிது. அதன்படி நடப்பது கடினம்.
* பணம் இல்லாதவன் ஏழை அல்ல. பேராசை உள்ளவனே உண்மையான ஏழை. 
* உன்னிடம் உள்ள குற்றத்தை கவனி. பிறரிடம் உள்ள நல்ல குணத்தைப்பார்.  
* ஆன்மிக சிந்தனை வளர வளர பிரச்னைகள் தேய ஆரம்பிக்கும். 
* பணம் இல்லாவிட்டாலும் நல்ல மனம் இருந்தால்கூட பிறருக்கு உதவலாம். 
* ஆயிரம் அறிவுரைகளை வழங்குவதை விட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடு. 
* உலகமே ஒரு பெரிய பல்கலைக்கழகம். அதில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியரே.
* உணவை வீணாக்காதே. அன்னதானம் செய்த புண்ணியத்தை பெறுவாய். 
* ருசிக்காக இல்லாமல் விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடு. 
* ரோஜாவின் அழகை பார்ப்பவன் அறிவாளி. அதில் உள்ள முள்ளை காண்பவன் முட்டாள். 
* உடல்நலம் இல்லாதவன் சாப்பிட விரும்புவதில்லை. மனநலம் இல்லாதவன் கடவுள் மீது பக்தி செலுத்துவதில்லை. 
* பிறருக்கு உதவ வேண்டும் என நினைத்தால்கூட கடவுளின் பார்வை உன் மீது விழும். 
* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளை கண்டு கலங்காதே. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்.