சபரிமலை ஆன்லைன் முன்பதிவு: தேவசம் போர்டிடம் வழங்க உத்தரவு
 சபரிமலை, சபரிமலைக்கு செல்ல பக்தர்கள், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் திட்டத்தை, மூன்று மாதங்களில் தேவசம் போர்டிடம் ஒப்படைக்குமாறு, போலீஸ் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறுப்புகேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய, கேரள போலீஸ் ஐ.ஜி.,யாக இருந்த சந்திரசேகரன் நாயர், ஆன்லைன் வாயிலான முன்பதிவை 15 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தார். இதில் முன்பதிவு செய்த பக்தர்கள், அய்யப்பனை குறைந்த நேரத்தில் தரிசனம் செய்ய முடிந்தது. இத்திட்டத்தை இதுவரையிலும் கேரள போலீஸ் துறையே செயல்படுத்தி வந்தது. இந்த உரிமையை தங்களுக்கு தரவேண்டும் என தேவசம் போர்டு கேட்டபோது, போலீஸ் துறை மறுத்துவிட்டது. இந்நிலையில் சிலர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை மூன்று மாதத்திற்குள் திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீஸ் துறைக்கு உத்தரவிட்டனர். பக்தர் விபரம்எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக, முன்பதிவு விபரங்களை போலீசுக்கு தேவசம் போர்டு வழங்க வேண்டும் என்றும், பக்தர்களின் தனிப்பட்ட விபரங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.