மந்தை கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :1295 days ago
மேலூர்: மேலுார்,வெள்ளலுார் மந்தை கருப்பண்ண சுவாமி, விநாயகர் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மந்தையில் இருந்து பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சித்தன் உடைப்பு கண்மாயில் கரைத்தனர். அதற்கு முன்பாக உறவுகள் வலுப்பெறுவதற்காக வயலில் விளைந்த அரிசி, பாசிப்பயறு, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரித்த கொழுக்கட்டைகளை உறவினர்கள் வீடுகளில் கொடுத்து வரவேற்று விருந்தோம்பல் செய்தனர்.