உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனையடுவார் நாயனார் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை

முனையடுவார் நாயனார் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை

தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் முனையடுவார் நாயனார் கோயிலில் திருநாவுக்கரசர் குரு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இக்கோவிலில் நேற்று விநாயகர், முருகன், அதிகாரநந்தி, காசி விசுவநாதர், விசாலாட்சி, முனையடுவ நாயனார், நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர்,சண்டிகேஸ்வரர், நால்வர்,தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகங்கள் நடந்தது. 63 நாயன்மார்களில் ஒருவரும்‌, சமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் என்றார் திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறு ஆன்மிகச் சொற்பொழிவு நடந்தது. சிவனடியார்களுக்கு மகேஸ்வர பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவனடியார்கள் ஈசன் பாடல்களை பாடினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராஜ்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !