ஆஞ்சநேயர் சிலையை நிறுவிய அறநிலையத்துறையினர்
ADDED :1362 days ago
மேலூர்: அழகர்கோயிலில் தீர்த்த கிணறு அருகில் இருந்த ஆஞ்சநேயர் சிலை நேற்று முன்தினம் திருடு போனது. இது குறித்து ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமசந்திரன், செயலாளர் வெங்கடேசன், துணை தலைவர் செந்தில்மூர்த்தி உள்ளிட்டோர் அறநிலையத்துயைினரிடம் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளால் நேற்று அதே இடத்தில் 2 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கற்சிலை நிறுவப்பட்டது. மேலும் சிலையை பாதுகாக்க கம்பி வலை அமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.