பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா
ADDED :1280 days ago
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு நாடார் தெருவில் பத்திரகாளியம்மன், தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. 32 ஆம் ஆண்டு சித்திரை தேர்விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் அன்னதானம் உள்ளிட்டவைகள் நடந்தது. உற்ஜவ மூர்த்தியான பத்திரகாளியம்மன் கீழக்கரை முக்கிய வீதிகளில் தேர் மூலமாக வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.