உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் ஏப்.30 ல் புரவி எடுப்பு: 2 ஆண்டுகளுக்குப் பின் நடக்கிறது

திருப்புத்தூரில் ஏப்.30 ல் புரவி எடுப்பு: 2 ஆண்டுகளுக்குப் பின் நடக்கிறது

திருப்புத்துார்: திருப்புத்துாரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அய்யனார் கோயில் புரவி எடுப்பு ஏப்,30 ல் நடைபெறுகிறது.

திருப்புத்தார்,தம்பிபட்டி,புதுப்பட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்டது குளங்கரை காத்த கூத்த அய்யனார் கோயில். இக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புரவி எடுப்பு விழா நடந்தது. பின்னர் கொரோனா ஊரடங்கால் புரவி எடுப்பு நடைபெறவில்லை. இந்த ஆண்டு கிராமத்தார் புரவி எடுப்பு நடத்த முடிவெடுத்து ஏப்.,15 ல் பிடி மண் கொடுத்தனர். தொடர்ந்து ஏப்.22ல் கோயில் குளத்திற்கு முன்பாக ‛ சேங்கை’ எனப்படும் சிவகங்கை ஊரணியை வெட்டினர். நாளை மாலை 4:00 மணி அளவில் கிராமத்தினர் சாமி அழைத்து வந்து சீதளிமேல்கரை ராமர் மடத்திலிருந்து புரவி துாக்க புதுப்பட்டி செல்கின்றனர். புதுப்பட்டியில் புரவி எடுத்து வந்து சீதளி கீழ்கரையில் சேர்க்கப்படும். பின்னர் ஏப்.,30 மாலை 3:00 மணி அளவில் புரவி பொட்டலிலிருந்து புரவி எடுப்பு துவங்கி முக்கிய தெருக்களின் வழியாக பெரியகண்மாய் கரையில் அமைந்துள்ள அய்யானர் கோயில் செல்லும். அடுத்து மே 1ல் மஞ்சுவிரட்டு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !